தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சையில் அசத்தல் அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா - திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் அவலம்! - Request to open Thanjavur science

ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவை (STEM PARK), ஆன்லைன் விளையாட்டை தவிர்த்து, கோடைக்காலத்தை பயனுள்ளதாக்க உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 10, 2023, 5:22 PM IST

ஆன்லைன் விளையாட்டை தவிர்க்க.. அறிவியல் ஆர்வத்தை தூண்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவை (STEM PARK) உடனடியாக திறக்கக் கோரிக்கை

தஞ்சாவூர்:கட்டுமானப் பணிகள் முழுவடைந்த பின்னும், மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவை (STEM PARK), கோடையில் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்காமல் தடுக்கும் விதமாக உடனடியாக திறக்க வேண்டும் என தஞ்சாவூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தஞ்சை அருளானந்த நகர் பகுதியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா இரண்டரை ஏக்கர் பரப்பளவில் ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தப் பணியினை மாநகராட்சி மேயர் ராமநாதன், செயற்பொறியாளர் ஜெகதீசன் உள்ளிட்ட அலுவலர்கள் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பே பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், இந்தப் பூங்காவில் பணிகள் நிறைவுற்ற நிலையில் மக்களின் பயன்பாட்டிற்காக பூங்கா எப்போது திறக்கப்படும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் பூங்காவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்காவும், மேலும் குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, 30 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏசி வசதியுடன் தொழில்நுட்ப கோளரங்கம், காட்சிக் கூடம், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஏவுகணைகள் மாதிரி, மியூசிக்கல் ஃபவுண்டன், மாபெரும் ராட்சத டைனோசர் பொம்மைகள், இன்பினிட்டி கிணறு, கண்காணிப்பு குவிமாடம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க:12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு!

அது மட்டுமல்லாமல் அறிவியல் குறித்த தகவல்களும் எழுதப்பட்டு அவற்றை படித்து தெரிந்துகொள்ளும் வகையில் பெயர்ப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களை கண்காணிப்பதற்கு சிசிடிவி கேமராவும் நிறுவப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறைக் காலம் என்பதால் இந்த பூங்காவினை, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாகத் திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து, மேயர் ராமநாதன் செய்தியாளர்களிடத்தில் கூறும்போது, 'தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் இந்தப் பூங்கா அறிவியல் தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ஆன்லைன் கேம்களில் விளையாடாமல் அறிவியல் தொடர்பான இது போன்ற பூங்காக்களை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் பூங்காவினை விரைவில் திறந்து வைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்தப் பூங்கா தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைப்பதற்காக காத்திருப்பதாகவும் இதனை உடனடியாக திறந்து வைத்தால், ஆன்லைன் விளையாட்டுகள் மீது மாணவர்களுக்கான ஆர்வம் குறைய வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 21 Years of Dhanushism: முகத்தை விமர்சித்தவர்கள் முன் உலகில் இந்தியாவின் முகமாக எழுந்த இளைஞனின் கதை!

ABOUT THE AUTHOR

...view details