கடந்த ஆண்டு கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டபோது தஞ்சாவூர் அருகே உள்ள கல்வி ராயப்பேட்டை கிராமத்தின் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. கல்லணை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தஞ்சை மாவட்டம் கடைமடை பகுதியான பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் சம்பா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.
அவசரகதியில் சீரமைப்புப் பணிகள்; விவசாயிகள் அச்சம்! - Renovation work
தஞ்சாவூர்: கடந்த ஆண்டு கல்லணை கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை தற்போது அலுவலர்கள் அவசரகதியில் சீரமைத்துவருவது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர்
கடந்த ஆண்டு சேதமடைந்த கால்வாயே இதுவரை சரி செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மேட்டூரில் தண்ணீர் திறக்க இருப்பதால், அவசரகதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஓராண்டு காலமாக பணி செய்யாமல், தண்ணீர் வரும் வேளையில் அவசரகதியில் செய்யப்படும் வேலைகள் முழுமையாக இருக்காது, மீண்டும் உடைவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.