தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 25, 2019, 10:49 PM IST

ETV Bharat / state

50,000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் பதிவு – தொல்லியல் துறை அலுவலர் தகவல்

தஞ்சாவூர்: 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொல் பொருட்களை பதிவு செய்துள்ளதாக தொல்லியல்துறை அலுவலர் காயத்ரி தெரிவித்துள்ளார்.

தொல்லியல்துறை அலுவலர் காயத்ரி

தஞ்சை பெரியகோயிலில், விழிப்புணர்வு பிரசாரம், புகைப்பட கண்காட்சி, தொல்லியல்துறை அலுவலர் காயத்ரி தலைமையில் நடைபெற்றது. இதில், தொல்லியல் துறை முதன்மை பராமரிப்பு அலுவலர் சங்கர், தொல்லியல் துறை புலத்தலைவர் ஜெயக்குமார், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொல்லியல்துறை அலுவலர் காயத்ரி

இந்நிகழ்ச்சிக்கு பிறகு தொல்லியல்துறை அலுவலர் காயத்ரி செய்தியாளர்களிடம் பேசுகையில்,100 ஆண்டுகள் பழமையான தொல் பொருட்கள், 75 ஆண்டுகள் பழமையான ஒவியங்கள், கடிதங்கள் ஆகியவற்றை தனி நபரிடம் இருந்தால் அதனை உடனடியாக பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்வதன் மூலம் அந்தப் பொருட்களை நாட்டின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடியும். அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிடும். இந்தியாவிற்குள்ளாக பிறரிடம் மாற்றம் செய்துக் கொள்ளலாம். வெளிநாடுகளுக்கு எடுத்து செல்ல முடியாது. இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொல் பொருட்களை பதிவு செய்துள்ளதாக அலுவலர் காயத்ரி கூறினார்.

இதையும் படிங்க: புவிசார் குறியீடு நாயகன் சஞ்சய்காந்திக்கு திருமணம்

ABOUT THE AUTHOR

...view details