தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளையக்கூடிய பகுதி. இந்த பகுதிகள் காவிரி நீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 7 ஆண்டுகளாக முறையாக பாசன நீர் கிடைக்காததால் விவசாயிகள் முழுமையாக நெல் பயிரிடவில்லை.
30 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு நெல் கொள்முதல்!
தஞ்சாவூர்: 30 ஆண்டுகள் இல்லாத அளவில் நடப்பாண்டு குறுவை பருவத்தில் ஒன்றரை லட்சம் டன் நெல், அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்தாண்டு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் கல்லணை கால்வாய் மூலம் தண்ணீர் வந்தடைந்து. விவசாயிகள் நெல் பயிரிடும் பணியை தொடங்கினர். இங்கு அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக தஞ்சை மாவட்டத்தில் 299 கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 58 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இதன்மூலம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு பருவத்தில் குறுவை சாகுபடியில் மட்டும் இவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக குறுவை பருவத்தில் 50,000 டன் வரை தான் கொள்முதல் செய்யப்படும். ஆனால் இந்தாண்டு மேட்டூர் அணையிலிருந்து உரிய நீர்வரத்து கிடைத்ததையடுத்து முப்பது ஆண்டுகள் இல்லாத அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.