தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார். அதில் குறிப்பிட்டிருந்ததாவது,
மதுபானத்திற்கு உரிய ரசீது
தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார். அதில் குறிப்பிட்டிருந்ததாவது,
மதுபானத்திற்கு உரிய ரசீது
"தமிழ்நாடு அரசின் முதுகெலும்பாக மதுபான கடை வருமானம் உள்ளது. அதில், விற்பனையாகும் மதுபானத்திற்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் நிர்ணய விலையைவிட 10 ரூபாய்க்கும் அதிகமாக வசூல்செய்யப்படுகிறது. மதுபான கடைகளில் போலி மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டில் உள்ள மதுபான கடைகளில் ரசீது வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு மதுபான கடையிலும் ரசீது வழங்கப்படுவதில்லை.
ஒவ்வொரு மதுபான கடையிலும் மதுபானத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட, அதிகமாக வசூல்செய்வதைத் தடுக்கவும், கணினிமயமாக்கப்பட்ட ரசீது வழங்கப்படவும், போலி மதுபான விற்பனையைத் தடுக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
விசாரணைக்கு வந்த மனு
அரசுத் தரப்பில் டாஸ்மாக் மதுபான கடைகளில் விலைப்பட்டியல் வைக்கவும், வாங்கும் மதுபானத்திற்கு பற்றுச்சீட்டு வழங்கவும் அறிக்கையானது, தாக்கல்செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், குறிப்பிட்ட கால இடைவெளியில் டாஸ்மாக் கடைகளில் ரசீது, விலைப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வுசெய்ய உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.