தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை மறவக்காடு ஊராட்சி உள்ளது. இங்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பெரும்பான்மையான நிலையிலும், பட்டியலின மக்கள் 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளனர்.
ஆனால் மாவட்ட அலுவலர்கள் கணக்கெடுப்பில் பட்டியலினத்தவர் அதிகளவில் உள்ளனர் எனவும், இதேபோல் ஒதியடிக்காடு என்ற ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தவர் உள்ளனர். ஆனால் பட்டியலினத்தவரே இல்லை எனவும் அலுவலர்கள் தவறான கணக்கெடுப்பை எடுத்துள்ளனர்.
இதனால் 20 ஆண்டுகளாக ஒற்றுமையுடன் ஊராட்சி மன்றத் தலைவரை தேர்ந்தெடுத்த மக்கள் இம்முறை நடந்த உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்திருந்தனர். இதனையடுத்து பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கோரிக்கை வைத்ததன்பேரில் உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மட்டும் வாக்களித்துள்ளனர்.
மீண்டும் தேர்தலை நடத்த மக்கள் கோரிக்கை இருப்பினும் முறையான கணக்கெடுப்பை நடத்தி ஊராட்சி மன்றத் தலைவரை முன்புபோல் தாங்கள் தேர்ந்தெடுக்க, மீண்டும் தேர்தலை நடத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பொய் பரப்புரையால் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தோல்வி - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்