தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து சம்பா சாகுபடியை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று இரவு தஞ்சாவூரில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை தொடர்ந்து பெய்தது.
இந்நிலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில், தஞ்சையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வரும் ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுன்ட்டரில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சியும், தஞ்சை பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சியும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பரவலாக பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.