ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு மலர் வண்ணன், ரெஜின் பாஸ்கர், ஜேசு, சஜிந்தர் ஆகிய நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தார்.
ஆனால், இவர்கள் மீண்டும் கரைக்கு திரும்பாததால், இவர்களைத் தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த கொள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று முன்தினம் நடத்திய தேடுதல் வேட்டையில், ரெஜின் பாஸ்கரின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.