தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை தென்னகப் பண்பாட்டு மைய கோடை விழா: சிறப்பாக அரங்கேறிய ராஜஸ்தான் சாக்ரி நடனம் - Thanjavur latest news

தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் நடைபெற்று வரும் கோடை விழாவில் ராஜஸ்தான் மாநில சாக்ரி என்ற பாரம்பரிய நடனம் நடைபெற்றது.

தஞ்சை தென்னகப் பண்பாட்டு மைய கோடை விழா: சிறப்பாக அரங்கேறிய ராஜஸ்தான் சாக்ரி நடனம்
தஞ்சை தென்னகப் பண்பாட்டு மைய கோடை விழா: சிறப்பாக அரங்கேறிய ராஜஸ்தான் சாக்ரி நடனம்

By

Published : Jun 25, 2023, 11:07 AM IST

தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் நடைபெற்று வரும் கோடை விழாவில் ராஜஸ்தான் மாநில சாக்ரி என்ற பாரம்பரிய நடனம் நடைபெற்றது

தஞ்சாவூர்:தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் என்பது இந்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் 1986ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மையத்தின் நோக்கமாக கிராமப்புற பாரம்பரிய கலைகளையும் மற்றும் பாரம்பரிய பழங்குடி கலைகளையும் பாதுகாக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கலை நிகழ்ச்சிகள், தேவாரப் பயிற்சி மற்றும் யோகா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இதனையடுத்து தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மைய வளாகத்தில் கோடை விழா கடந்த ஜூன் 21ஆம் தேதி தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநர் கோபால கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மற்றும் மேயர் ராமநாதன் ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்.

இந்த விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலங்கானா, கோவா, ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 15 மாநிலங்களைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு, தங்களது மாநில பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நான்காம் நாளாக நேற்று (ஜூன் 24) ராஜஸ்தான் மாநிலத்தின் சாக்ரி (Chakri) என்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர். மேலும் இவ்விழா தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் மட்டுமல்லாது, அருகில் உள்ள பாபநாசம், திருச்சி பெல் வளாகம், திருச்சி கலைக்காவேரி கவின் கலைக் கல்லூரி மற்றும் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மேலும், மாதந்தோறும் வெள்ளிக்கிழமை வாராந்திர கலை விழாவும் நடைபெறுகின்றன. தஞ்சை மற்றும் தஞ்சைக்கு அருகில் உள்ள கலைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தஞ்சை நகர மற்றும் அருகில் உள்ள கிராமப்புற மக்களின் கலை ஆர்வத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் இந்த கலை நிகழ்ச்சிகள் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது.

இந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையிட அனுமதி இலவசமாக அனுமதிக்கப்படுகிறது. அதேநேரம், 5 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் கேரள மாநில களரிபயட்டு (kalaripayattu) மற்றும் பரதநாட்டியம், ஜார்க்கண்ட் மாநில சாவ் நடனம், உத்தரகாண்ட் காஸ்ரியாரி நடனம் மற்றும் ராஜஸ்தான் மாநில பாரம்பரிய கல்பெலியா என்ற நடனமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பாரம்பரிய கலைகளை கலைஞர்கள் தினமும் பல்வேறு பகுதிகளில் சுழற்சி முறையில் நடத்தி வருகின்றனர். மேலும், பல்வேறு மாநில கைவினைப் பொருட்கள் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Varahi Amman: தஞ்சாவூர் பெரியகோயில் வாராஹி அம்மனுக்கு தேங்காய் பூ அலங்காரம்!

ABOUT THE AUTHOR

...view details