தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடுகளுக்குள் புகுந்துள்ள மழை நீரால் பொதுமக்கள் அவதி! - தஞாசாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர்: மல்லிப்பட்டினம் கிராமத்தில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால், மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வீட்டிற்குள் புகுந்த தண்ணீர்
கிராமத்தை சூழ்ந்த மழை நீர்

By

Published : Dec 8, 2019, 12:00 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது மல்லிப்பட்டினம் கிராமம். இந்த கிராமத்தில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், மல்லிப்பட்டினம் வடக்கு தெரு பகுதியில் முறையான வடிகால் வாய்க்கால் இல்லாததால் மழை காலங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து விடுகிறது. இது கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேலும், மழை தொடர்ந்து பெய்துவருவதால் வீடுகளுக்குள் மழை நீர் புகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

கிராமத்தைச் சூழ்ந்த மழை நீர்

இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக தஞ்சாவூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் இந்த மல்லிப்பட்டினம் வடக்கு பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் உள்ளூரில் உள்ள உறவினர் வீடுகள் அல்லது வெளியூரில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மூன்று நாட்களாக இப்பகுதியில் மழை பெய்யாத நிலையில், தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமல் இருந்து வருகிறது. இதனால், இப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல், பல தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது. இது தவிர வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதற்காக வீடுகளுக்குள் மோட்டாரை வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

இதையும் படிங்க: வெள்ளப்பெருக்கால் வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்.!

ABOUT THE AUTHOR

...view details