சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இருந்து தஞ்சைக்கு தினந்தோறும் காலையில் சோழன் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தினந்தோறும் ஆடுதுறை ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை இறக்கி விடுவது வழக்கம். ஆனால் இன்று பிற்பகலில் ஆடுதுறைக்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் நடைமேடையில் நிற்கமால் சென்றுள்ளது. ஆடுதுறை ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் சீனிவாசன் தவறுதலாக ரெட் சிக்னலுக்கு, பதிலாக கிரீன் சிக்னல் கொடுத்ததால் தான் ரயில் நிற்கமால் சென்றதாக கூறப்படுகிறது.
ரயிலுக்கு சிக்னல் காட்டுவதில் தவறுசெய்த ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடைநீக்கம்
தஞ்சை: ஆடுதுறை ரயில் நிலையத்தில் ரெட் சிக்னலுக்கு பதிலாக கிரீன் சிக்னல் காட்டிய ஸ்டேஷன் மாஸ்டர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரயில் நிலையம்
இதையறிந்த கேட்கீப்பர் ரயிலின் பைலட்டிற்கு தகவல் கொடுத்து ரயிலை நிறுத்தினார். இருப்பினும், ரயில் நடைமேடை கடந்து விட்டதால், பின்புறமாக ரிவர்ஸ் கியர் போட்டு எடுத்து வரப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.
இதையடுத்து, இத்தவறுதலுக்கு காரணமான ஸ்டேஷன் மாஸ்டர் சீனிவாசனை நிலைய மேலாளர் தற்காலிகமாக பணியிடைநீக்கம் செய்தார். மேலும் சீனிவாசன் இதுபோல் இரண்டு முறை ஏற்கனவே தவறு செய்ததாக கூறப்படுகிறது.