தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்களை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் எம்பியுமான வைத்திலிங்கம் வழங்கிப் பாராட்டு தெரிவித்தார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதங்களே உள்ளன. அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும். ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.