புரட்டாசி மாதத்தில் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகியவை வேண்டி விரதம் இருந்து கடவுளை தரிசிக்கும் முறை கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம் உண்டு.
புரட்டாசி கடைசி சனிக்கிழமை: கோயில்களில் வழிபாடு! - Puratasi last Saturday and devotees pray
தஞ்சாவூர்: புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி தென்னக திருப்பதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
![புரட்டாசி கடைசி சனிக்கிழமை: கோயில்களில் வழிபாடு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4727250-thumbnail-3x2-tha.jpg)
temple
புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
இந்நிலையில், புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி செல்வம், ஆயுள், ஆரோக்கியம் வேண்டி தஞ்சை மாவட்டம் தென்னக திருப்பதி என்று போற்றப்படும் உப்பிலியப்பன் திருக்கோயிலில் அதிகாலை 4 மணியளவில் விசுவரூப தரிசனம் தொடங்கியது. சிறப்பு மலர் அலங்காரத்தில் உப்பிலியப்பன் பெருமாள் காட்சியளித்தார். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்தனர்.