தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில் தஞ்சை அடுத்து அமைந்துள்ளது.
புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்ட விழா! - punnainallur muththu maariyamman temple festival
தஞ்சாவூர் : பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயிலில் தேரோட்ட விழா விமரிசியாக நடைபெற்றது.
இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆவணி மாதம், ஆவணித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டும் ஆவணி விழாவானது கடந்த 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆவணித் திருவிழாவில் தொடர்ந்து பல்வேறு கோலங்களில், அம்மன் மக்களுக்கு காட்சியளித்ததைத் தொடர்ந்து இன்று தேர் பவனி நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அலங்கரிக்கப்பட்ட முத்துமாரியம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீதியில் நின்று வழிபட்டனர்.