தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊர் குளத்தைத் தூர்வாரி, குளக்கரையில் 400 மரக்கன்றுகள் நட்ட கிராம மக்கள்!

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே புலவன்காடு கிராமத்து மக்கள் தாங்களாகவே முன்வந்து குளத்தைத் தூர்வாரி வரும் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Pulavankadu people clean their village pond

By

Published : Nov 19, 2019, 12:31 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புலவன்காடு கிராமத்தில் அமைந்துள்ள 'நம்ம சூரியன் கோயில் குளம்' பல நாட்களாக தூர்வாரப்படாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், ஊர்ப் பொது மக்கள், மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து, சூரியன் கோயில் குளத்தைப் பராமரிக்கும் வகையில், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு கரைகளையும் தூய்மைப்படுத்தி 400க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர்.

பொதுமக்களே தாமாக முன் வந்து குளத்தினை பராமரித்து வரும், செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையின் அறிவுறுத்தலின் பேரில், பலரும் குளத்தினை தூர்வார ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாலையில் பறந்தது தனது பணம் என நினைத்து ரூ. 3 லட்சத்தை தவற விட்ட விவசாயி

ABOUT THE AUTHOR

...view details