தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே பாத்திமா நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இது குறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் நாஞ்சிக்கோட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
தஞ்சாவூர்: நாஞ்சிக்கோட்டை அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
பொதுமக்கள் சாலை மறியல்
இதையடுத்து காவல் துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: இறந்த இளைஞர் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்!