தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தவறான நீதி என வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து காவல்துறையினரிடம் அனுமதி பெறப்பட்ட போது அதற்கு அனுமதி அளிக்கவில்லை அதனைத்தொடர்ந்து அனுமதியை மீறி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.