தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசை வார்த்தைக்கூறி பேராசிரியையை ஏமாற்றிய பேராசிரியர் கைது! - தனியார் கல்லூரி

தஞ்சாவூர்: தனியார் கல்லூரி பேராசிரியையைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி, ஏமாற்றிய பேராசிரியரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆசை வார்த்தை கூறி பேராசிரியையை ஏமாற்றிய பேராசிரியர் கைது
ஆசை வார்த்தை கூறி பேராசிரியையை ஏமாற்றிய பேராசிரியர் கைது

By

Published : Mar 9, 2020, 10:11 PM IST

29 வயதான பெண் பேராசிரியையும், தஞ்சை கரந்தை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் அஸ்வின்ராஜ் (29) என்பவரும் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தனர். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். அஸ்வின்ராஜ் பெண் பேராசிரியையைத் திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தை கூறி, பலமுறை திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் பேராசிரியை அஸ்வின்ராஜிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். மேலும் அஸ்வின்ராஜின் தந்தை செல்வராஜ், பெண் பேராசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பெண் பேராசிரியை வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்துவிட்டு, தற்போது அஸ்வின்ராஜ் ஏமாற்றிவிட்டதாக புகாரளித்தார்.

இப்புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி மற்றும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அஸ்வின்ராஜை கைது செய்தனர்.

இதையும் படிங்க:

குழந்தைகளின் ஆபாச படங்கள் விற்பனை செய்த இருவர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details