உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ், நாடெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் கரோனா வைரஸ் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசும், அரசின் பல்வேறு துறைகளும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பொது நல மருத்துவராக இருப்பவர் டாக்டர் சந்திரசேகர். இவர், பொதுமக்கள் 500 பேருக்கு முகக் கவசங்களை இலவசமாக கொடுத்து, அவர்களுக்கு கரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தையும் வழங்கி வருகிறார்.
முக கவசங்களை இலவசமாக வழங்கிய மருத்துவர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வர்த்தக கழகப் பொருளாளர் ஜகுபர்அலி மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்த பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவு மீறல்: இளைஞர்களுக்கு தோப்புக்கரணம் தண்டனை