தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய பூசாரி - சிசிடிவி காட்சி வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சி - கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய பூசாரி

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற நீலகண்ட பிள்ளையார் கோயில் உண்டியல் பணத்தை பூசாரி ஒருவர் பதுக்கி வைக்கும் காட்சிகள் வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய பூசாரி
கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய பூசாரி

By

Published : Jul 30, 2021, 2:39 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பிரசித்தி பெற்ற நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் முகூர்த்த நாள்களில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கில் திருமணம், காதணி விழா நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வழிபாடு செய்து காணிக்கையாக தங்கம், வெள்ளி, ரொக்க பணம் ஆகியவற்றை உண்டியலில் செலுத்துகின்றனர்.

பணம் திருடும் கோயில் பூசாரி

அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் உண்டியல் நிறைந்ததும், அறநிலையத் துறை அலுவலர்கள், முடப்புளிக்காடு கிராமத்தினர், கோயில் பூசாரிகளான சங்கரன் வகையறாக்கள், அலுவலகப் பணியாளர் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணுவது வழக்கம்.

அவ்வாறு கடந்த 28ஆம் தேதி புதன்கிழமை அங்குள்ள மண்டபத்தில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. அப்போது கோயில் பூசாரிகளில் ஒருவர் பணத்தை எடுத்து தனது சட்டை பைக்குள் பதுக்கி வைக்கும் சிசிடிவி காட்சி அப்பகுதி மக்களிடையே பரவியது.

காவல் நிலையத்தில் புகார்

இந்நிலையில், சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கழித்து, கோயில் நிர்வாக அலுவலர் சிதம்பரம் பேராவூரணி காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, பூசாரிகள் தரப்பில் அறங்காவலர் தலைவர் கணேசன் சங்கரன் என்பவர் கூறுகையில்,

“இச்சம்பவம் பற்றி எங்களுக்கு தாமதமாகவே தெரியவந்தது. அதில் ஈடுபட்டது யார் என்று எங்களுக்குத் தெரியாது. கோயில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிப்பதாக சொல்லியுள்ளனர்” என பதிலளித்தார்.

பொதுமக்கள் கோரிக்கை

இது குறித்து முடப்புளிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கே. பி. செழியன் என்பவர் கூறுகையில், "உண்டியல் எண்ணும்போது கிராமத்தாராகிய எங்களை இந்த முறை அழைக்கவில்லை. உண்டியல் பணம் எண்ணும்போது, கோயில் பூசாரி ஒருவர் பணத்தை பதுக்கி வைக்கும் காட்சி தெளிவாக வெளியாகியுள்ளது.

கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய பூசாரி

இது குறித்து துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக நாங்களும் காவல் துறையில் புகார் தெரிவிக்க உள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு! - சிசிடிவி மூலம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details