கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தஞ்சாவூர்:கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் 26 நபர்களில், மூன்று பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 26 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதைத் தொடர்ந்து, அந்த 26 நபர்களுக்கும் டெங்கு காய்ச்சல் இருக்கிறதா? என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவில் சமீபத்தில் சென்னையில் இருந்து கும்பகோணம் ராமச்சந்திரபுரத்திற்கு திரும்பியவர், கும்பகோணம் அருகே முல்லை நகர் கொரநாட்டு கருப்பூரை சேர்ந்தவர் உள்பட மூன்று பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து அவர்களுக்காக சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது. எஞ்சிய 23 பேரும் தொடர்ந்து காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். கும்பகோணம் பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு மூவர் சிகிச்சை பெற்று வருவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளத
இதையும் படிங்க:குப்பையில் அரசு மருத்துவமனைகளில் வழங்கும் சத்து டானிக்குகள் - தஞ்சையில் நடப்பது என்ன?