தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் நகராட்சி சார்பாக நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வைரஸிலிருந்து பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது என்று செயல்முறை விளக்கம் அளித்தனர்.
வழக்கறிஞர்கள் கரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு.!
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் வழக்கறிஞர்கள் கரோனா வைரஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
நகராட்சி அதிகாரிகள் பேருந்து நிலையம், மருத்துவமனை, சிறைச்சாலை, வட்டாட்சியர் அலுவலகம் என பல்வேறு பகுதிகளுக்கு சென்று கரோனோ வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன்படி இன்று பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதிகள் , வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்களுக்கு , நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கரோனோ வைரஸ் குறித்து விழிப்புணர்வு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. பின்பு நீதிபதிகள் முன்னிலையில் வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் , நகராட்சி அதிகாரிகள் ,ஊழியர்கள் குரோனோ வைரஸ் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.