தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோத கொலை வழக்கு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு - அரசு தரப்பு வழக்கறிஞர்

முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

prejudice-murder-case-punishment-for-5-members-of-the-same-family
முன்விரோத கொலை வழக்கு :ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயும் தண்டனை விதிப்பு

By

Published : Jul 17, 2023, 10:58 PM IST

Updated : Jul 17, 2023, 11:12 PM IST

முன்விரோத கொலை வழக்கு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கும்பகோணம் : சாக்கோட்டை, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர், பவுன்ராஜ் (67). இவருக்கு சுந்தரபாண்டி, மருதுபாண்டி, கார்த்தி ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகனுக்கும் முன்விரோத பகை இருந்ததாக சொல்லப்படுகிறது. அன்பழகனுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு அன்பழகன் மகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அன்பழகன் பல முறை கருப்புசாமியை கண்டித்துள்ளார். இதற்கிடையில் பவுன்ராஜ் குடும்பத்தினர் கருப்புசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் தனது மகன்களுடன் பவுன்ராஜ் வீட்டின் முன்பு தகராறில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கியுள்ளனர். இதனை பார்த்த பவுன்ராஜின் மகன் சுந்தரபாண்டி தடுக்க முயன்றபோது , அன்பழகன் தனது மகன்களுடன் சுற்றி வளைத்து தாக்கி, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவயிடத்திலேயே சுந்தரபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன், அன்புநிதி, அறிவுநிதி, அருள்நிதி, அழகுநிதி ஆகியோரை கைது செய்து, வழக்கு பதிந்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக விஜயகுமார் ஆஜரானார். காவல் ஆய்வாளர் ரேகாராணி ஆகியோர் குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கை, கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராதிகா விசாரித்து, குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சுந்தரபாண்டியை கத்தியால் குத்தி படுகொலை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை அன்பழகன் மற்றும் மகன்கள் அன்புநிதி, அறிவுநிதி, அருள்நிதி, அழகுநிதி ஆகிய ஐவருக்கும் ஆயுள் தண்டனையுடன், தலா ரூபாய் 13 ஆயிரத்து 750 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதல் சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.

கும்பகோணம் சாக்கோட்டை அம்பேத்கர் நகரில் கடந்த 2017ம் ஆண்டு காதல் விவகாரம் தொடர்பான முன்விரோதம் காரணமாக, கட்டிடத் தொழிலாளி சௌந்தரபாண்டியை (26) கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையுடன் அபராதம் விதித்தும் கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:Trichy - விபச்சார தடுப்பு எஸ்.ஐ கைது - ரூ.3000 லஞ்சம் பெற்றபோது சிக்கினார்!

Last Updated : Jul 17, 2023, 11:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details