தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு - Nandiam Peruman at the Tanjore Big Temple

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு அபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோயில் நந்தி பெருமானுக்கு பிரதோஷம்
தஞ்சை பெரிய கோயில் நந்தி பெருமானுக்கு பிரதோஷம்

By

Published : Jan 10, 2021, 10:54 PM IST

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு பிரதோஷம் வழிபாடு இன்று (ஜன.10) பக்தர்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை பெரிய கோயில் நந்தி பெருமானுக்கு பிரதோஷம்


2021ஆம் ஆண்டின் முதல் பிரதோஷம் தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு நந்தியம் பெருமானை தரிசனம் செய்தனர். சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு தனி சிறப்பு பெற்றது. அதிலும் பிரதோஷத்தில் நந்தியம் பெருமானை வழிபட்டால் எல்லா விதமான பாவங்களையும் போக்கும் என்றும் ஆன்மிக பெருமக்களால் கூறப்படுகிறது.

தஞ்சை பெரிய கோயில் நந்தி பெருமானுக்கு பிரதோஷம்

அத்தகையை சிறப்பு மிக்க பிரதோஷம் தஞ்சை பெரிய கோயிலில் இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2021ஆம் ஆண்டின் முதல் பிரதோஷம் தஞ்சாவூர் பெரியகோயிலில் பெருவுடையாருக்கு ஏற்ற 13 அடி நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், தயிர், சந்தனம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தியபெருமானுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு நந்தியம் பெருமனை தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details