தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேகதாது அணை... பிரதமரை பார்ப்பதில் எந்த பயனும் இல்லை: பி.ஆர். பாண்டியன்

தஞ்சாவூர்: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமரை பார்ப்பதில் இனி எந்த பயனும் இல்லை என தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பிஆர் பாண்டியன்
பிஆர் பாண்டியன்

By

Published : Jul 15, 2021, 5:19 PM IST

காவிரியின் குறுக்கே, மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை கண்டித்தும், அதற்கான திட்ட அறிக்கையை பெற்றுள்ள நீர்வளத் துறை அமைச்சகத்தை கண்டித்தும், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், ”உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மோடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க குடியரசுத் தலைவருக்கு பொறுப்பு உள்ளது. மேகதாது அணை கட்டினால் 32 மாவட்டங்கள், சென்னை உள்பட 11 மாநகராட்சிகளில் உள்ள 5 கோடி மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் 25 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாகும். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு மக்கள் அகதிகளாக வெளியேறும் நிலை உருவாகும். உடனடியாக மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முடிவை குடியரசுத் தலைவர் தலையிட்டு நிறுத்த வேண்டும்.

பி.ஆர். பாண்டியன் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இனிமேல் பிரதமர் மோடியையும், நீர்வளத் துறை அமைச்சரையும் பார்ப்பதினால் எந்த பயனும் இல்லை. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக தனது செயல்பாட்டை மாற்றி, அரசியல்ரீதியாக அழுத்தத்தை குடியரசுத் தலைவர் மூலமாக பிரதமருக்கு கொடுக்க வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details