மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விளக்கும் கூட்டம் பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று இரவு (டிச.19) பூதலூர் வழியாக திருச்சி சென்ற தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் எல்.முருகனை, தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் தங்க கென்னடி வரவேற்றார்.
பொங்கல் பரிசா? தேர்தலுக்கான பரிசா? - எல்.முருகன் விளக்கம் - பொங்கல் பரிசு திட்டம்
தஞ்சை : பொங்கல் பண்டிகை தமிழ்நாடு மக்களின் வாழ்வோடு கலந்த பண்டிகை , இந்த பண்டிகைக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்குவது காலம் காலமாக நடந்துவருகிறது இதில் தேர்தலுக்கான அரசியல் ஏதும் இல்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் எல்.முருகன்
அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், "பொங்கல் பண்டிகை தமிழ்நாடு மக்களின் வாழ்வோடு கலந்த பண்டிகை , இந்த பண்டிகைக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்குவது காலம் காலமாக நடந்துவருகிறது. கரோனா காலத்தில் அனைவரும் வேலை இல்லாமல் இருந்துவரும் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்குவதை பாரதிய ஜனதா கட்சி முழுமனதோடு வரவேற்கிறது" என்றார்.