தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்பகோணத்தில் பதுக்கப்பட்ட 2,675 பாண்டிச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்! - thanjai latest crime news

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் பதுக்கி வைத்திருந்த 3 லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபானப் பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

pondicherry-3-lakhs-worth-2675-illicit-liquor-bottles-seized-in-kumbakonam
3 லட்சம் மதிப்புள்ள 2,675 மது பாட்டில்கள் பறிமுதல்!

By

Published : Jan 7, 2020, 11:38 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மேற்கு காவல் நிலைய காவல் துறையினருக்கு பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

அதன்பேரில் கும்பகோணம் தனியார் பள்ளி அருகில் உள்ள ஒரு வீட்டில் காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் 2 ஆயிரத்து 675 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்ததையடுத்து, அந்த வீட்டின் உரிமையாளர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

அதைத் தொடர்ந்து ரூ. 3 லட்சம் 80 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை தனிப்படையினர் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க: கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!

ABOUT THE AUTHOR

...view details