தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் துர்கா செல்லியம்மன் கோயில் குளம் மிகவும் பழமை வாய்ந்த குளமாகும். இக்குளம் நீண்ட வருடங்களாக தூர்வாரப்படாமல், செடிகளும், முள்புதர்களும் வளர்ந்து ஒரு காடு போல காட்சியளித்தது.
சொந்த செலவில் குளத்தை தூர்வாரிய இளைஞர்கள் - அதிராம்பட்டினம் துர்கா செல்லியம்மன் கோயில் குளம்
தஞ்சை: அதிராம்பட்டினம் துர்கா செல்லியம்மன் கோயில் குளத்தை இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் தூர்வாரினர்.
thanjai
இந்நிலையில் அதிராம்பட்டினத்திலுள்ள இளைஞர்கள் ஒன்றுகூடி அக்குளத்தை சொந்த செலவில் தூர்வார முடிவு செய்தனர். அதன்படி, இன்று இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து குளத்தை தூர்வாரினர். இவர்களின் இந்த செயலை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
TAGGED:
thajavur latest news