தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிலை கடத்தல் வழக்கில் சிக்கியவருக்கு பணி வழங்கக்கூடாது: பொன். மாணிக்கவேல் வாதம்! - pon manickavel

தஞ்சாவூர்: சிலை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு பணி வழங்கக்கூடாது என நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் வாதம் செய்துள்ளார்.

பொன் மணிக்கவேல்

By

Published : Sep 3, 2019, 10:39 PM IST

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004ஆம் ஆண்டு சிவனுக்கு பூஜை செய்யும் மரகதத்தாலான மயில் சிலை திருடப்பட்டதாக ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக, அப்போது கோயிலின் செயல் அலுவலராக பணியாற்றி வந்த கூடுதல் ஆணையர் திருமகளை கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று கைதுசெய்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து, திருமகளை கூடுதல் ஆணையர் பொறுப்பிலிருந்து பணி இடைநீக்கம் செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. பின்னர் பிணையில் வெளியே வந்த திருமகள், தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், பிணை நிபந்தனையை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பொன். மாணிக்கவேல் நேரில் ஆஜர்

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக வழக்கு நடைபெறும் கும்பகோணம் நீதிமன்றத்தினை நாடுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாதவ ராமானுஜம் முன்பு திருமகள் ஆஜரானார். அதேபோல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலும் ஆஜராகி, திருமகளின் பிணைக்கான நிபந்தனையை தளர்த்தக் கூடாது என்றும், அவருக்கு மீண்டும் பணி வழங்கக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரும் 6ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details