தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு நேற்று காலை அர்ஜுன் சம்பத், காவி துண்டு போர்த்தி ருத்ராட்சை அணிவித்து மரியாதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு! - திருவள்ளுவர் சிலை
தஞ்சாவூர்: திருவள்ளுவர் சிலையைச் சுற்றி, தடுப்பு வேலிகள் போடப்பட்டு காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் சிலையைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு
இதனையடுத்து பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் திருவள்ளூர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக, சர்ச்சை எழுந்துவந்ததையடுத்து, தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் சிலையைச் சுற்றி பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
மேலும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள சாலை முற்றிலும் அடைக்கப்பட்டு, சிலையைச் சுற்றிப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.