தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி - காவல்துறை விசாரணை - theft attempt at thiruvaiyaru atm Tanjavur

தஞ்சாவூர்: திருவையாறு அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

theft attempt at thiruvaiyaru atm Tanjavur
ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

By

Published : Nov 13, 2020, 2:14 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியுடன் ஏடிஎம் உள்ளது.

நேற்று (நவ. 11) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் ஏடிஎம்முக்குள் புகுந்து மின் இணைப்பை துண்டித்துவிட்டு பீஸ் கேரியரையும், டிஜிட்டல் லாக்யையும் அகற்றிவிட்டு கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் ஏடிஎம்மில் இருந்து பணமோ, பொருளோ திருட்டுபோகவில்லை. இதை பார்த்த வங்கி கிளை மேலாளர் சாருமதி திருவையாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் திருவையாறு காவல் ஆய்வாளர் செந்தில்குமார், துணை ஆய்வாளர் ஞானமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க...பஞ்சு மிட்டாய் விற்பனையாளரைத் தாக்கி பணம் பறித்த கும்பல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details