தஞ்சாவூர்: பர்மா காலனியைச் சேர்ந்த குணசேகரன் - ராஜலட்சுமி இருவரும் வீட்டின் எதிர்ப்பையும் மீறி, காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால், உறவினர்கள் யார் தயவுமின்றி தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ராஜலட்சுமிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை தஞ்சை அரசு இராசமிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில், ராகலட்சுமிக்கு யாரும் உதவிக்கு இல்லாததைக் கண்ட பெண் ஒருவர், ராஜலட்சுமிக்கு மூன்று நாள்களாக மருத்துவமனையில் உதவி செய்துள்ளார்.
ராஜலட்சுமியை இன்று காலை கழிவறைக்கு அனுப்பிவிட்டு, தனக்கு மயக்கம் வருவதாகக் கூறி ராஜலட்சுமியின் கணவரை வெந்நீர் வாங்க அனுப்பியுள்ளார்.
சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை