தஞ்சாவூர் மாவட்டம், மேல வீதியைச் சேர்ந்தவர் மோசஸ் மோகன்ராஜ். இவர் பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவர், தனது மனைவி ஜெனிபர், இரண்டரை வயது மகள் கேத்தரின் எஸ்தருடன் அதிராம்பட்டினத்தில் வசித்து வந்தார். சமீபத்தில் இவர் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தஞ்சையில் மணல் லாரி மோதியதில் காவலர் உயிரிழப்பு! - Police died at Thanjavur due to road accident
தஞ்சாவூர்: மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த மணல் லாரி மோதியில் காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கடந்த சில நாள்களாக விடுப்பில் இருந்த மோசஸ், தனது நண்பர்களைப் பார்க்க தஞ்சாவூருக்குச் சென்றுள்ளார். பின்னர், நேற்று(ஆக.21) காலை பைக்கில் பெரியகோயில் பகுதியிலிருந்து மருத்துவக் கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்குள்ள மேம்பாலத்தில் செல்லும்போது, எதிரே வந்த மணல் லாரி பைக் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மோசஸ் உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.