ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவையாறில் காவல்துறையினரின் விழிப்புணர்வு அணிவகுப்பு பேரணி..! - Police awareness rally

தஞ்சாவூர்: திருவையாறு அருகே வீரசிங்கம்பேட்டையில் காவல்துறையினரின் விழிப்புணர்வு அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

Police awareness rally in Thiruvaiyar  காவல்துறையினரின் விழிப்புணர்வு அணிவகுப்பு பேரணி  காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணி  திருவையாறில் காவல்துறையினரின் விழிப்புணர்வு அணிவகுப்பு பேரணி  Police awareness rally  Police awareness rally in Thanjavur
Police awareness rally
author img

By

Published : Dec 1, 2020, 12:13 AM IST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த வீரசிங்கம்பேட்டை கிராமத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் அச்சம், பயம் இல்லாமல் வாழ்வதற்கும் காவல்துறை எந்தநேரமும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும், ஆபத்து மற்றும் அவசர காலங்களில் உடனடியாக வந்து பாதுகாப்போம் உள்ளிட்ட பல நோக்கத்தோடு காவலர்களின் அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

இந்த அணிவகுப்பு பேரணிக்கு கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகிக்க, திருவையாறு டிஎஸ்பி சித்திரவேல், ஆயுதப்படை டிஎஸ்பி சம்பத் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தப் பேரணியில் கலந்துகொண்ட காவல் துறையினர், பொதுமக்களுக்கு எந்தந்த வகையில் உடனடியாக பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பதை பற்றியும், பொதுமக்கள் அச்சமில்லாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் செயல்முறை விளகத்துடன் செய்து காண்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளர்கள் விஜயலெட்சுமி, ஸ்ரீதேவி, வீரசிங்கம்பேட்டை ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உதவி காவல் ஆயவாளர்கள் ஞானமுருகன், ஜோஸ்பின்சிசாரா, காவலர்கள், பொதுமக்கள் உட்பப பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:கரோனா பரவலைத் தடுக்க கொடி அணிவகுப்பு

ABOUT THE AUTHOR

...view details