தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது! - தஞ்சாவூர் தற்போதைய செய்தி

தஞ்சாவூர்: பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபரை வாகன சோதனையின்போது காவல்துறையினர் கைது செய்தனர்.

two wheeler thief in kumbakonam

By

Published : Oct 12, 2019, 7:23 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் அருகே காவல்துறை ஆய்வாளர் கவிதா வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ராஜேஷ் (19) என்ற வாலிபரைப் பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் அந்த நபர் சோழபுரம், திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து சுமார் 5 லட்சம் மதிப்பிலான 7 இருசக்கர வாகனங்களை திருவிடைமருதூர் காவல்துறையினர் கைப்பற்றினர்.

தொடர் வாகன ஈடுபட்ட வாலிபர் கைது

பின்னர் காவல்துறையினர் ராஜேஷை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையும் படிக்கலாமே: பள்ளிவாசல் கொள்ளை - காவல் துறை வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details