தஞ்சாவூர்:கடந்த 9 ஆம் தேதி தமிழ் பல்கலைக்கழகம் அருகே பேங்க் ஸ்டாப் காலனியில் உள்ள ஒரு வீட்டில், பின்புற கதவை உடைத்து பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை செய்தனர்.
பகலில் குப்பை சேகரிப்பு... இரவில் திருட்டு அப்போது சிசிடிவி கேமராவில் குப்பை சேகரிக்கும் ஒரு இளைஞர் சந்தேகத்திற்கிடமாக அங்கும் இங்கும் செல்வதை அறிந்த போலீசார், அவர் குறித்த தகவல்களை சேகரித்தனர். அதில், இளைஞரின் பெயர் சிவா என்பதும், அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தேடி வந்த நிலையில், து சிவாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பகலில் குப்பை சேகரிப்பது போல் நடித்து, யாரும் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: ரூ. 41 லட்சம் மதிப்புள்ள ஆம்பர் கிரீஸ் பதுக்கி வைத்திருந்த தந்தை, மகன் கைது