தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி கருணாகரன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மரிய ஐஸ்வர்யா (16) என்ற மகளும், தாம்ஆண்ட்ரூஸ் என்றும் மகனும் இருந்தனர்.
இவர்களில் மரிய ஐஸ்வர்யா அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ஐஸ்வர்யா, மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஐஸ்வர்யாவை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மரிய ஐஸ்வர்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
பள்ளியில் ஆசிரியர்கள் மாணவிக்கு கடுமையான தண்டனைகளை வழங்கியதால் தான், மனமுடைந்து மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார் என அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.