தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தஞ்சை மருத்துவமனையில் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை' - அமைச்சர் விஜயபாஸ்கர்! - தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர்

தஞ்சாவூர்: அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

'Plasma treatment will be started soon at Tanjore Hospital' - Minister Vijayabaskar!
'Plasma treatment will be started soon at Tanjore Hospital' - Minister Vijayabaskar!

By

Published : Aug 8, 2020, 5:05 PM IST

தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் கண் மருத்துவமனை நூற்றாண்டு நினைவு வளைவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஆகஸ்ட் 8) திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து ராசா மிராசுதார் மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் நலசிறப்பு சிகிச்சை மையத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தமிழ்நாடு வேளாண்மைதுறை அமைச்சர் துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "கரோனா தொற்று குறித்து இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகம் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், அதிக நபருக்கு சோதனை செய்ததில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருப்பதாகவும், தற்போது வரை 77 விழுக்காட்டினர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேசமயம் பொதுமக்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி, எந்த வித தொற்றுக்கும் மருந்துகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் தஞ்சை அரசு மருத்துவமனையில் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படவுள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டில் உயிர் காக்கும் மருந்துகள் தயாராக இருக்கின்றன. அதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details