தஞ்சாவூர்: கும்பகோணம் நண்பர்கள் அமைப்பு சார்பில் நேற்று (ஜூன் 25) புறா பந்தயம் நடைபெற்றது. இப்பந்தயத்தில் 14 புறாக்கள் பங்கேற்றன. காலை 7 மணிக்கு பந்தயம் தொடங்கிய நிலையில், பிற்பகல் 2 மணிக்கு மேல் பறக்கக்கூடிய புறாக்களில் அதிக நேரம் பறக்கும் புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அந்த புறாவிற்கு ரூபாய் 5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
கும்பகோணத்தில் 'மாரி' பட ஸ்டைலில் புறா ரேஸ்... பந்தயம் அடித்த புறாவுக்கு ரூ. 5 ஆயிரம்... - புறா பந்தயம்
கும்பகோணம் நண்பர்கள் அமைப்பு சார்பில் நேற்று (ஜூன் 25) புறா பந்தயம் நடைபெற்றது. இப்பந்தயத்தில் பல்வேறு வகையை சேர்ந்த 14 புறாக்கள் பங்கேற்றன.
புறா பந்தயத்தில் புறா வளர்ப்போர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
இப்புறா பந்தயத்தில் சாதா புறா, கர்ண புறா, சப்ஜா புறா, கீரி புறா, கைரா புறா போன்ற பல வகை புறாக்கள் என மொத்தம் 14 புறாக்கள் இப்போட்டியில் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சக்கு சக்கு வத்திக்குச்சி... ஒயிலே ஒயிலே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மன்சூர் அலிகான்!