தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த ஏனாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் 73 வயதான நடேசன். விவசாயக் கூலி வேலை, கோல மாவு விற்பது என தன் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.
மாற்றுத் திறனாளியான இவர், கரோனா தாக்கத்தில் தன் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார். இதற்கான நிவாரணத்தை பெற 60 கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியை மிதித்து ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளார்.
கரோனா பரிசோதனை மேற்கொள்ள வரிசையில் நின்ற பெண்ணுக்கு பிரசவம்!
அங்கு தனக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை இன்னும் வழங்கவில்லை என்று கூறி வட்டாட்சியரிடம் மனு அளித்து விட்டு தன் வீட்டை நோக்கி பயணத்தை தொடர்ந்தார்.
73 வயது மாற்றுத் திறனாளி... நிவாரணம் வேண்டி 60 கிமீ சைக்கிள் பயணம்! இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து, அரசு அலுவலர்கள் அவர்கள் வீடுகளுக்கே சென்று நிவாரணம் அளிக்க வேண்டும் என்பது தான் இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.