ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடமாடு மஞ்சுவிரட்டு வழக்கு: தஞ்சாவூர் ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு - பட்டுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்க கோரிக்கை மனு

மதுரை: வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரிய வழக்கில் தஞ்சாவூர் ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

petition to high court for approval of manjuviratu in pattukottai
petition to high court for approval of manjuviratu in pattukottai
author img

By

Published : Feb 4, 2020, 8:00 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த வீரபுத்திரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ஜனவரி 1ஆம் தேதியன்று வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்கோரி தஞ்சாவூர் ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்தேன். ஆனால் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த ஆட்சியர் அனுமதி மறுத்து விட்டார். 33 ஆண்டுகளாக வடமாடு மஞ்சு விரட்டு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஜல்லிகட்டு நடத்த தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெளியிட்ட அறிவிப்பானையில், எங்கள் ஊர் பெயர் இல்லை என்று கூறி அனுமதி மறுக்கின்றனர் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் ஜல்லிகட்டு நடத்தலாம் என்றும் அதற்கு அனுமதி மறுப்பது அரசியலமைப்பு பிரிவு 13, 15க்கு எதிரானது என்றும் எங்களிடம் விதிப்படி போதிய இட வசதி உள்ளது என குறிப்பிட்டு, பட்டுக்கோட்டை அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள், துரைசுவாமி, ரவீந்திரன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் மாதம் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் 9 பேர் கைது!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details