தஞ்சாவூர்: பசுபதிகோவில் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நெல் வியாபாரம் செய்து வருகிறார்.
செங்கிப்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரிடம் ரூ.40 லட்சம் வரை சக்திவேல் நெல் வியாபாரம் செய்துள்ளார். ஆனால் அண்ணாதுரை ரூ.18 லட்சம் பணத்தை திருப்பி தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மன வேதனைக்கு உள்ளான சக்திவேலுக்கு நோய்வாய்ப்பட்டது.
ஆக்ஸிஜன் சிலிண்டருடன் நெல் வியாபாரி மனு இந்நிலையில் தன்னை ஏமாற்றிய நபரிடமிருந்து பணத்தை மீட்டு தர கோரி சக்திவேல் ஆக்ஸிஜன் சிலிண்டர் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தார்.
இதையும் படிங்க: ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்ற நரிக்குறவர்கள்: காவல் துறையினருடன் வாக்குவாதம்