தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயக்குனர் பா. ரஞ்சித் மீது இந்து அமைப்பினர் புகார்! - director pa. ranjith

தஞ்சாவூர்: ராஜராஜ சோழனை அவதூறாக பேசிய இயக்குனர் பா. இரஞ்சித்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

இந்து அமைப்பினர் புகார்

By

Published : Jun 10, 2019, 10:17 PM IST

அந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது,

கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாளில் கடந்த 5ஆம் தேதி நீலப்புலிகள் இயக்கம் நிறுவன தலைவர் உமர் பாரூக் நினைவஞ்சலி விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் பா.இரஞ்சித் பேசுகையில், "ராஜராஜ சோழன் ஆட்சி காலம் தான், நம்முடைய இருண்ட காலம். இந்த மண்ணில் இருந்து நான் சொல்வேன். ஆனால் ராஜராஜ சோழன் எங்கள் சாதி என்று 8 க்கும் மேற்பட்ட சாதிச் சங்கங்கள் போட்டி போடுகின்றனர். ராஜ ராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் தஞ்சை டெல்டா பகுதியில் பட்டியலின மக்களின் நிலம் பறிக்கப்பட்டது.

மேலும், சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறை அன்றைக்கு ஆரம்பிக்கப்பட்டது. 400 பெண்கள் விலை மாதர்களாக மாற்றி மங்கள விலாஸ் வச்சிட்டு வந்து மிகப்பெரிய அயோக்கியத்தனம் பண்ணினது, ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில் தான் தேவதாசி அமைப்பு முறையை மிகத் தெளிவாக அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் இங்கு அமல்படுத்தப்பட்டது. இங்கிருந்து கோலார் தங்க வயலுக்கு 26 பெண்களை விற்று இருக்கிறார்கள், என்று பேசியுள்ளார்.

அனைத்து சாதிகளும் சகோதர பாசத்துடன் ஒற்றுமையுடன் வாழும் இந்தியாவில், சாதிகளுக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் விதமாகவும், சாதிய வன்முறையை தூண்டும் வகையில் வரலாற்றைத் திரித்து பேசியுள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உடனே கைது செய்ய வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details