தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை நாச்சியார்கோவில் மெயின் ரோட்டில் குத்புதீன் மகன் பஷீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர், ஆசையாக ஒரு வயதான பூனை ஒன்று வளர்த்து வந்தார். அதற்கு பட்டுக்குட்டி என்று பெயர் வைத்துள்ளர் பசீர் அகமது. அந்தப் பூனை காம்பவுண்ட் சுவற்றில் உட்கார்ந்திருந்த போது, அவ்வழியே சென்ற சுவாமிமலை அருகே உள்ள பட்டவர்த்தி மெயின் ரோடு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் வீரமணி என்பவர் மதில் மேல் உட்கார்ந்திருந்த பூனையை கல்லால் அடித்துள்ளார்.
ஆசையாய் வளர்த்த பூனை உயிரிழப்பு - கொலைகாரன் கைது! - Thanjavur district
தஞ்சாவூர்: வீட்டில் வளர்க்கும் பூனையை கல்லால் அடித்துக் கொன்றவரை மிருகவதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
person who killed the cat has been arrested
இதனால் பூனை தலை பகுதியில் பலமாக அடிபட்டதால் அந்த இடத்திலேயே உயிரிழந்தது. இதனை பார்த்த பசீர் அகமது, கல்லால் அடித்து பூனையைக் கொன்ற வீரமணி மீது நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வீரமணியின் மீது மிருகவதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து காவல்துறையினர் வீரமணியை கைது செய்தனர்.