தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டுக்கோட்டை நசுவினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு... தடுப்பணை கட்ட மக்கள் கோரிக்கை! - விவசாயம்

தஞ்சை: பட்டுக்கோட்டை பகுதியில் நசுவினி ஆறு, அக்னி ஆற்றிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் நீரைத் தேக்கி வைக்க ஏதுவாக; அவ்விரு ஆற்றின் நடுவே தடுப்பணை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

nasuvini river

By

Published : Oct 23, 2019, 2:26 PM IST

தஞ்சை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள நசுவினி, அக்னி ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பட்டுக்கோட்டை பகுதி கடைமடைப்பகுதி என்பதால் தண்ணீர் பற்றாக்குறையால் கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் செழிக்கவில்லை. தற்போது பெய்த மழையினால் இந்த இரண்டு ஆறுகளில் நீர் கரை புரண்டு ஓடுவதைக்கண்டு அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நசுவினி ஆறு

இருந்த போதிலும் இந்த இரு ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் ஏதும் இல்லாததால் ஆற்று நீரானது வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. எனவே, ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் முழுமையான சாகுபடி செய்வதற்கும், கோடை காலத்தில் வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும் நசுவினி மற்றும் அக்னி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை அரசு கட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:பண்டிகை காலத்திலும் பணி... போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் தராமல் இழுத்தடிக்கும் அரசு!

ABOUT THE AUTHOR

...view details