தமிழ்நாடு

tamil nadu

கழிவு நீர் குட்டையால் தொற்றுநோய் அபாயம் - பாதிப்புக்குள்ளாகும் மக்கள்!

By

Published : Nov 24, 2019, 3:18 PM IST

தஞ்சாவூர் : பழஞ்செட்டித் தெரு பகுதியில் உள்ள வண்ணான்குளம் பகுதியில் தொற்றுநோய் ஏற்படுத்தும் வகையில் கழிவுநீர் சூழ்ந்து காணப்படுவதால் அவற்றை அகற்ற அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

people-affected-by-waste-water-pont

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பழஞ்செட்டித் தெரு பகுதியில் வண்ணான்குளம் உள்ளது. இது நாளடைவில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி குப்பைகள், கழிவுப் பொருட்கள் கொட்டப்பட்டு தற்போது கழிவு நீர் தேங்கி தொற்றுநோய் ஏற்படும் வகையில் உள்ளது.

இதனால் துர்நாற்றம் வீசுவதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மர்மக்காய்ச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மழைக் காலங்களில் இந்தக் குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீர் மழை நீரோடு கலந்து, வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் இதன் அருகிலேயே குடிநீர் குழாய் இருந்து வருவதால், இந்த கழிவு நீர் குடிநீரோடு கலந்துவிடவும் செய்கிறது.

மேலும், இந்த கழிவு நீர் குட்டைக்கு அருகிலேயே 30 குழந்தைகள் படிக்கும் பாலர் பள்ளி அமைந்துள்ளது. இதனால், அங்கு படிக்கும் ஏழை குழந்தைகள் அடிக்கடி தொற்று நோய்க்கு உள்ளாகி வருவது தொடர்ந்து வருகிறது.

கழிவுநீர் சூழ்ந்து காணப்படும் வண்ணான் குளம்

மேலும், இப்பகுதியில் உள்ள ஆடு, மாடுகள் அடிக்கடி இந்த குட்டைக்குள் விழுந்து உயிரிழக்க நேரிடுகிறது. இந்நிலையில் இந்த கழிவுநீர் குட்டையால் பல இடையூறுகளை இப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, கால்நடைகள் அப்பகுதியில் இருந்து வரும் சூழலில் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் இந்த குட்டையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் பேரூராட்சி நிர்வாகமோ, சுகாதாரத் துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இப்பகுதி மக்களிடம் இருந்து வருகிறது.

இதையும் படிங்க:

கார் மோதி விபத்து: இரண்டு பேர், 15 ஆடுகள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details