பட்டுக்கோட்டை அருகிலுள்ள கருங்குளம் கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ளவர்கள் விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
கருங்குளம் கிராமம் கடைமடை பகுதி என்பதால், டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி நீர் வந்தாலும் இந்த கிராமத்திற்கு தண்ணீர் வருவது அரிதாகவே இருக்கும். கடந்த ஐந்து வருடங்களாக காவிரி நீர் இப்பகுதிக்கு வராததால், இந்த கிராமத்திற்கு பிரதானமான நீராதாரமாக விளங்கிய கருங்குளம் ஏரி வறண்டு போனது.
கருங்குளம் ஏரிக்கு கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் ஆகியவற்றிற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுபற்றிய விரிவான செய்தி நமது ஈ.டிவி. பாரத்தில் 'வீணாகக் கடலில் கலக்கும் ஆற்றுநீர்; பொதுமக்கள் வேதனை!' என்ற தலைப்பில் வெளிவந்தது.
இந்தச் செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து வீணாக கடலுக்குச் செல்லும் ஆற்று நீரை கருங்குளத்தில் உள்ள ஏரியில் நிரப்பும் வகையில் கால்வாய் அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுவருகின்றனர். அரசு அலுவலர்களின் இந்த நடவடிக்கையால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க :தலைமறைவான பாம் சரவணன் நீதிமன்றத்தில் சரண்!