தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் சுண்ணாம்புக்காரத் தெருவில் அமைந்துள்ளது, அங்காள அம்மன் ஆலயம். இது கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இது மன்னர்கள் வழிபட்ட கோயில் என்பதால், மன்னர்களின் வம்சாவழிகள் இந்தக் கோயிலைப் பராமரித்தும் வழிபட்டும் வருகின்றனர். கோயிலின் சிறப்பம்சம் 'குடல் கவ்வுதல்' நிகழ்ச்சியாகும்.
ஆட்டுக் குடல் போர்த்தி சாமி ஆடும் விநோத வழிபாடு!
தஞ்சை: அங்காள அம்மன் கோயிலில் ஆட்டுக் குடல் போர்த்தி சாமி ஆடும் விநோத வழிபாட்டை பொதுமக்கள் வியந்து பார்த்துச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியை ஒட்டி விரதம் இருந்த ஒருவர், ஆட்டுக் குடலை ஊதி மாலையாகப் போட்டுக்கொண்டு, அதன் ஒரு முனையை வாயில் கவ்வியபடி நகரின் முக்கியப் பகுதிகளில் வலம் வந்தார். இந்நிகழ்வு 'குடல் கவ்வுதல்’ நிகழ்ச்சி என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு அடுத்ததாக கப்பறை எனப்படும் தீச்சட்டி ஏந்தும் நிகழ்ச்சியும், அதன்பின் நள்ளிரவில் சாமி ஆடி இடுகாட்டுக்குச் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். நேற்று 'குடல் கவ்வுதல்' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைப் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.
இதையும் படிங்க:மகாசிவராத்திரி: உலகம் முழுவதுமிருந்து சிவன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்