தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பரக்கலக்கோட்டை கிராமத்தில் பல ஆண்டுகளாக மிகப்பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த ஆலமரத்தில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் குடியிருந்து வருகின்றன.
இந்த பறவைகளுக்கு ஒரு சின்ன தொந்தரவு கூட கொடுக்காத இப்பகுதி மக்கள் இந்த பறவைகளுக்காகவே 50 ஆண்டு காலமாக கிராமத்தில் பட்டாசு வெடிப்பதில்லை. இந்த வௌவால்களை பார்வையிட சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலரும் அக்கிராமத்திற்கு வருகை தருகின்றனர்.