தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதத்தால் ஊராட்சி மன்ற உறுப்பினர் கத்தியால் குத்திக்கொலை - Assassination by knife

தஞ்சாவூர்: திருவிடைமருதூர் அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவிடைமருதூர் அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் முன்விரோதத்தில் கத்தியால் குத்தி படுகொலை
திருவிடைமருதூர் அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் முன்விரோதத்தில் கத்தியால் குத்தி படுகொலை

By

Published : Aug 27, 2020, 5:09 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள வண்ணக்குடி பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (31). இவர் வண்ணக்குடி ஊராட்சி மன்ற ஐந்தாவது வார்டு உறுப்பினராக உள்ளார். இவரது உறவுக்காரப் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் திருமணம் செய்துகொள்வதற்காக பெண் கேட்டுள்ளார். ஆனால், கல்யாணசுந்தரம் பெண் கொடுப்பதற்கு இடையூறாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன் மற்றும் அவரது உறவினர் மகேந்திரன் இருவரும் சேர்ந்து கல்யாணசுந்தரத்தை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

கல்யாணசுந்தரம் படுகாயத்துடன் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதுபற்றி திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நவீன் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details